எலி, தொள்ளுப் பூச்சி மூலம் பரவும் நோய் பிளேக் எனப்படும். பிளேக் (Plague) குடலிய நுண்ணுயிரி வகையான எர்சினியா பெசுட்டிசால் ஏற்படும் கொடிய நோய்த்தொற்று ஆகும். இந்த பாக்டீரியாவினால் பிளேக் நோய் ஏற்படுகின்றது என்பதை பிரான்சிய-சுவிசு மருத்துவரான அலெக்சாண்டர் எர்சினும் சப்பானின் ஷிபாசாபுரோ கிடசாட்டோவும் 1894இல் ஹாங்காங்கில் கண்டறிந்து அறிவித்தனர். இந்த நோயைப் பரப்பும் நோய்ப்பரப்பி உயிரினமாக (vector) இறந்த எலிகளின் உடலில் வாழும் உண்ணிகளை அடையாளம் கண்டவர் பவுல்-லூயி சைமண்டு ஆகும்.~~~~சூன் 2007 வரை உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட வேண்டிய மூன்று நோய்களில் ஒன்றாக பிளேக் நோய் இருந்தது; வாந்திபேதியும் மஞ்சள் காய்ச்சலும் மற்ற இரு நோய்களாகும்.~~~~நுரையீரல் தொற்றால் ஏற்பட்டதா அல்லது அசுத்தம் காரணமாக ஏற்பட்டதா என்பதைப் பொறுத்து பிளேக்நோய் காற்று மூலமாகவோ நேரடித் தொடர்பு மூலமாகவோ சரியாக சமைக்கப்படாத மாசுமிகு உணவாலோ பரவலாம். ஒவ்வொரு நபரின் பாதிக்கப்பட்ட உடற்பகுதியைப் பொறுத்து பிளேக் நோயின் அறிகுறிகள் அமைந்திருக்கும்: அரையாப்பு பிளேக்கு நிணநீர்க் கணுக்களிலும், குருதிநச்சு பிளேக்கு குருதி நாளங்களிலும், வளியிய பிளேக்கு நுரையீரல்களிலும் ஏற்படும். துவக்கத்திலேயே சிகிட்சை அளிக்கப்பட்டால் இது குணமாகக் கூடிய நோய். உலகின் சிலபகுதிகளில் பிளேக்கு இன்னமும் தொற்றுநோயாக உள்ளது. ~~~~ ஒரு ஊரில் பிளேக் நோய் பரவுவதை கண்ட மாத்திரத்தில் உடனுக்குடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வட்டாட்சியர் மற்றும் சுகாதார ஆய்வாளருக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.