பிறப்பு அறிக்கையை தயார் செய்யும் படிவம் ஒன்றாகும். இறப்பு அறிக்கையை தயார் செய்யும் படிவம் இரண்டாகும். உயிரற்ற பிறப்பு அறிக்கையை (அதாவது குழந்தை வயிற்றுக்குள் இறந்து வெளிவருவது அல்லது இறந்தே பிறப்பது) தயார் செய்யும் படிவம் மூன்றாகும். மருத்துவமனையில் இறந்ததற்கான காரணத்திற்கு மருத்துவர் அளிக்கும் சான்று 'படிவம் நான்காகும்'. வீட்டில் நேரிட்ட இறப்பிற்கான காரணத்திற்காக மருத்துவ சான்று படிவம் - 4A ஆகும். ~~~~பிறப்புச் சான்று படிவம் ஐந்தாகும். இறப்புச் சான்று படிவம் ஆறாகும். பிறப்புப் பதிவேடு படிவம் ஏழாகும். இறப்புப் பதிவேடு படிவம் எட்டாகும். உயிரற்ற இறப்புப் பதிவேடு படிவம் ஒன்பதாகும். கிடைக்கப் பெறாமை சான்று படிவம் பத்தாகும். பிறப்புகள் மாதாந்திர சுருக்கம் படிவம் பதினொன்றாகும். இறப்பு பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் படிவம் 12 ஆகும். உயிரற்ற பிறப்புகள் மாதாந்திர அறிக்கை படிவம் 13 ஆகும். அறிக்கை பெரும் கட்டுப்பாட்டுப் பதிவேடு பதினான்கு ஏ ஆகும். ஆண்டுப் புள்ளி விபர அறிக்கை படிவம் பதினான்கு பி ஆகும்.