கிராம நிர்வாக அலுவலரை மாவட்டத்திற்குள் பதவி மாற்றம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே உண்டு. எனினும் ஒரு குறிப்பிட்ட கோட்டத்திற்குள் ஒரு கோட்டாட்சியரால் கிராம நிர்வாக அலுவலரை பதவி மாற்றம் செய்ய இயலும். அதற்கான அதிகாரம் கோட்டாட்சியர் அவர்களுக்கு உண்டு. அதே போல சில சமயங்களில் ஒரு கிராம நிர்வாக அலுவலர் நிர்வாகக் காரணங்களுக்காக மாவட்டத்திற்கு வெளியே பணி மாற்றம் செய்யப்படலாம்.