தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியான ஆட்சி அமைப்பு ஒன்று இருக்கிறது. இந்த ஆட்சி அமைப்பின் கீழ் பல்வேறு துறை அலுவல்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியில் இருப்பவரின் கீழ் இயங்குகின்றன. மாவட்ட அளவில் நிலம் சம்மந்தமான பணிகளைக் கவனிக்கும் முதன்மை அதிகாரிகளாக இவர்கள் இருக்கின்றனர்.