பிறப்பு இறப்பு பதிவேடு, கால் நடைச் சாவடிகளின் கணக்கு, பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேடு போன்றவை கிராம நிர்வாக அலுவலரிடம் தான் இருக்கும். இது தவிர, கிராம நிர்வாக அதிகாரியின் இன்னொரு முக்கியமான கடமை நில ஆக்கிரமிப்பை தடுப்பது ஆகும். கிராமத்தில் நிகழும் சமூக விரோதக் செயல் குறித்த அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பும் கூட கிராம நிர்வாக அலுவலரைத் தான் சேரும்.