சாதிச் சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் தான் பெற முடியும். தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் 7 பிரிவுகளில் பட்டியலிடுகிறது. இவை முறையே;~~~~(i) பட்டியல் சாதிகள் (76)~~~~(ii) பட்டியல் பழங்குடியினர் (36)~~~~(iii) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136)~~~~(iv) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்) (7)~~~~(v) மிகவும் பிற்பட்ட சாதிகள் (40)~~~~(vi) சீர்மரபினர் (68)~~~~(vii) முற்பட்ட சாதிகள் (79) ~~~~ஆகியனவாகும்.