வருவாய் துறைக்குச் சொந்தமான கட்டிடங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் பொதுக் கட்டிடங்கள் குறித்த பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இதே போல, சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வு ஊதிய விவரங்கள் அனைத்தும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். அதே போல, கிராம மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி பற்றிய விபரங்கள் அனைத்தும் ஊரகக் குடிநீர் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.