பிறப்பு இறப்புப் பதிவை கிராமப் பஞ்சாயத்தில் வருவாய் துறை தான் மேற்கொள்ளும்.~~~~ஒரு குழந்தையின் முதல் உரிமை அதன் பிறப்பை பதிவு செய்வது தான். இப்படியாக பிறப்பிற்கு எவ்வாறு முக்கியத்துவம் தந்து நாம் பதிந்து வைக்கிறோமோ. அதே போல இறப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்தல் அவசியம். காரணம், இந்த இறப்பு சான்றிதழ் இருந்தால் தான் வாரிசுதாரர்களால் இறந்தவர்களின் காப்பீட்டுத் தொகையையோ அல்லது இதர சொத்துக்களையோ பிரச்சனை இல்லாமல் பெற முடியும். ஆகவே தான் இந்த பிறப்பு, இறப்புப் பதிவு 'பிறப்பு இறப்புச் சட்டம் 1969 (மத்தியச் சட்டம் 18/1969) மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்புப் பதிவு விதிகள் 2000 படி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பிறப்புப் பதிவேட்டில் குழந்தையின் பெயர் என்ற கலத்தில் வெறும் குழந்தை என எழுதக் கூடாது. ஒருவேளை பெயர் தெரியாவிட்டால் அல்லது பெயர் வைப்பதில் சரியான தீர்மானம் இல்லாவிட்டால் பூர்த்தி செய்யாமல் விட்டு விடுவது நல்லது. ~~~~பொதுவாக இந்தப் பிறப்பு, இறப்பு ஆகிய இவை இரண்டையுமே நிகழ்வு நடந்த இடத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் நாட்காட்டி ஆண்டுப்படி தான் அவற்றை பதிவு செய்தல் வேண்டும். தத்தெடுக்கும் குழந்தையின் பிறப்புப் பதிவு 'பிரிவு 13 RBD சட்டம் 1969' இன் படி பதிவு செய்யப்படுதல் வேண்டும்.