முதன் முதலாக 12,506 கிராம அலுவலர்கள் மாநில அளவில் நியமிக்கப்பட்டனர்.~~~~நம் இந்திய திரு நாட்டின் அடிப்படை ஆதாரமாக விளங்குபவை கிராமங்கள். ஏனெனில் கிராமங்களின் கட்டமைப்பில் தான் இந்தியா என்ற நம்முடைய மிகப்பெரிய நாடு உருவாக்கப்படிருக்கிறது. உலக அரங்கில் நமது நாடு தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால் , இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களின் வளர்ச்சியினால் மட்டுமே அது சாத்தியமாகும் . இன்று இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைத்து கிராமங்களின் ஒன்றிணைந்த வளர்ச்சியில் தான் அடங்கியிருக்கிறது. இந்த கிராமங்களின் வளர்ச்சி என்பது இன்றைக்கு தானே நிகழ்ந்து விட முடியாது . எனவே ஒரு கிராமம் சிறப்பாக வளர்ச்சி பெற , அங்கே ஒரு சிறந்த நிர்வாக கட்டமைப்பு தேவையாக இருக்கிறது. கிராம அளவில் ஒரு சிறந்த நிர்வாகம் அமைகின்ற போது அதன் காரணமாக கிராமங்களின் வளர்ச்சியிலும் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். எனவே இந்த வளர்ச்சியில் குறிப்பட்டுச் சொல்லும் படியாக இந்த கிராமங்களில் பணிபுரியக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்களின் சிறப்பான செயல்பாடு அவசியமாகிறது.