பிரிட்டன் இந்தியாவில் அல்லது மன்னர் காலத்தில் நிலவரி செய்தவர்கள் ஜமீன்தார்கள் ஆவர். அதாவது அக்காலத்தில் நாட்டின் ஒரு பகுதியில் வரி வசூல் செய்து ஆண்டு அனுபவித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர்கள் ஜமீன்தார்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஆண்ட பகுதிகள் ஜமீன் என்றே அழைக்கப்பட்டது. ஜமீன்தார்கள் மொத்த வசூலையும் பெற்று அதனை அரசுக்கு செலுத்துவார்கள். இப்படியாக ஜமீன் அரசுக்கு செலுத்தும் தொகை பெஷ்குஷ் என்று அழைக்கப்பட்டது. பதிலுக்கு ஜமீன்களுக்கு அரசால் வழங்கப்பட்ட தொகையை தஸ்டிக் படிகள் என்பர். பிற்பாடு 1948 இல் அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த ஜமீன்தாரி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.