மீன்வளப் பதிவேடு மற்றும் வீட்டு மனை பட்டா பதிவேடு ஆகிய இவை இரண்டும் கிராம நிர்வாக அலுவலரிடம் தான் இருக்கும். அது மட்டும் அல்ல மரம் நடும் விபரம், சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பதிவேடு, இவ்வளவு ஏன்? புராதான சின்னங்களை பாதுகாக்கக் கூட கிராமத்தில் பதிவேடுகள் பதிவு செய்யப்படுகிறது. மேலும் அன்னியர் வருகை குறித்த பதிவேடு கூட கிராம நிர்வாக அலுவலரிடம் தான் காணப்படும். மேலும், சமூக நலத் திட்டங்களை பற்றிய பதிவேடும் கிராம நிர்வாக அலுவலரிடம் தான் இருக்கும். இது சமூக நலத் திட்டங்கள் கிராமத்தில் செயல்படுவதற்கான ஆதாரமாக விளங்குகிறது.