கிராமக் கணக்கு எண் 7 இல் புறம் போக்கு நிலம் பற்றிய விவரங்கள் உள்ளன. இது இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவில் புறம்போக்கு தரிசு ஆக்கிரமிப்பிற்கு விதிக்கப்படும் தீர்வை, உள்ளூர் மேல் வரிகள் போன்றவற்றை எண் வாரியாக எழுத வேண்டும். இரண்டாவது பிரிவில் புஞ்சை நிலங்களுக்கு விதிக்கபப்டும் தீர்வு, புறம் போக்கு நிலங்களுக்கு விதிக்கப்படும் தண்ணீர் தீர்வை, அபராதம், மேல்வரி போன்றவை பற்றிய அனைத்து விவரங்களும் இருக்கும்.