நிலவரியை நான்கு தவணைகளாகச் செலுத்தலாம். மேலும் இந்த நிலவரியானது ஜனவரி மாதம் முதல் செலுத்தப்படுகிறது. இப்படியாக ஜனவரி மாதத்தில் இருந்து நான்கு தவணைகளாகச் செலுத்துவதற்குப் பெயர் தான் கிஸ்தி மாதங்கள் எனப்படும். அதே போல ஒவ்வொரு மாதமும் பிரதி மாதம் 10 ஆம் நாளுக்கு மேல் நிலவரி செலுத்தப்படாவிட்டால் அது நிலுவையில் எடுத்துக் கொள்ளப்படும். பிற்பாடு அந்த நிலுவைத் தொகையானது நிலவரி வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும்.