மத்திய அரசு கொடுக்கும் நிதியுதவியின் நோக்கம் "மாநிலங்களின் நிதி வளத்தினைப் பெருக்கவே". இங்கு கவனிக்க வேண்டியது, மத்திய அரசு அல்லது இந்திய அரசு என்பது, இந்திய நாட்டின் ஒன்றிய அரசு. இது இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பெற்றது. அதுமட்டுமில்லாமல் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, குடியரசு இந்தியாவில் அடங்கிய 28 மாநிலங்களையும் மற்றும் 9 ஆட்சிநிலப் பகுதிகளையும் தன் ஆளுமையில் ஒன்றிணைக்கின்றது. இதன் செயல் மையமாக இந்தியத் தலைநகர் புது தில்லி விளங்குகின்றது. இந்தியக் குடிகளைக் காக்கும் அடிப்படைச் சட்டங்களான சமூக நலன் மற்றும் குற்றவியல் சட்ட வடிவுகள், அவற்றினை இயற்றிய நாடாளுமன்றம் போன்றவைகளை இந்திய குடிகளைக் காக்க அமைக்கப்பெற்றவைகளாகும். இதன் கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சி கோட்பாட்டின்படி அதன் மாநில அரசுகள் இச்சட்டவடிவுகளை, ஆளுமைகளை, நீதிபரிபாலணைகள் செயற்படுத்துவதற்கான கிளை அமைப்புகளாக செயற்படுகின்றன. இதன் சட்ட முறைகளான கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சிக் கொள்கையை செயற்படுத்தும் விதமாக ஆங்கிலத்தை பொது மொழியாகக் கொண்டு செயற்படுகின்றது. பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிபரிபாலனத்தில் இந்தியா இணக்கம் கொண்டுள்ளதால் இந்தியா சில பல ஒதுக்கீடுகளையும் பெற்றுள்ளது. அதன் அதிகாரப் பரவலாக்கல், இந்தியாவின் ஊராட்சி மன்றம் என்ற உள்ளாட்சி அமைப்பின் மூலம் கடைக்கோடியில் உள்ள கிராமங்கள் வரை சென்றடைகிறது. நாடாளுமன்ற அரசு இந்தியாவில் ஐக்கிய இராச்சிய அரசு முறையை பின்பற்றி செயற்படுகின்றது, (வெஸ்ட் மினிஸ்டர் முறை). சட்டமியற்றும் இடமாக நாடாளுமன்றம் செயல்படுகின்றது. இது இரண்டு அவைகளை கொண்டுள்ளது. நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களான 545 உறுப்பினர்கள் மக்களவையில் (கீழவை) செயல்படுகின்றனர். மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் (மேல் சபை) செயல்படுகின்றனர். அரசியலைமைப்பின் தலைவராக குடியரசுத் தலைவர் செயல்படுகின்றார். அரசின் தலைவாராக பிரதமர் மற்றும் அவர் அமைச்சரவையும் செயல்படுகின்றனர். இந்தியாவின் நீதிபரிபாலனம் பிரித்தானிய காலத்திலிருந்து தொடரப்பட்டு வருகின்றது.இந்தியாவின் உச்ச நீதிமன்றம் , அதன் தலைமை நீதிபதி மற்றும் 25 துணை நீதீபதிகளின் உதவியுடன் நீதிபரிபாலனம் புரிகின்றது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.