பொதுவாகப் பாசன ஆதாரங்கள் ஐந்து வகைப் படும். அதில் முதல் பிரிவில் வருடம் முழுக்க நிலங்களுக்குத் தண்ணீர் தரும் ஆதாரங்கள் வரும். இதற்கு உதாரணமாக வைகையையும், காவேரியையும் சொல்லலாம்.~~~~இரண்டாவது நிலையில் வருடத்திற்கு 8 முதல் 10 மாதங்களுக்கு நீர் தரக் கூடிய ஆதாரங்கள் வரும்.~~~~மூன்றாவது வகுப்பில் 5 மாதம் முதல் 8 மாதம் வரையில் தண்ணீர் தரக் கூடியவை வரும்.~~~~ஏனைய சிறிய ஏரிகள் நான்காம் வகுப்பில் வரும்.~~~~கடைசியாக மூன்று மாதங்களுக்கு குறைவாக நீர் வழங்கும் பாசன ஆதாரங்கள் ஐந்தாம் பிரிவில் வரும்.