கி.மு. 304 இல் விண்ணில் வெளிச்சமிடும் நட்சத்திரங்களை ஆய்வு செய்த ஒரே கிரேக்க மேதை அரிஸ்ட்டாட்டில் ஆவார். அதன் பிறகே மற்றவர்கள் விண் வெளியை ஆராயத் தொடங்கினார்கள். இப்படியாக ஆராய்ந்து அரிஸ்ட்டாட்டில் எழுதிய நூல் தான் மெட்ரியாலாஜிக்கா. இது நான்கு பாகங்களைக் கொண்டது. விண்ணுக்கும், மண்ணுக்கும் உள்ள தொடர்பை அழகாய் எடுத்து சொல்லும் நூல் இது. இந்நூலில் விண்வெளியில் ஏற்படும் ஒரு சிறு மாறுதல் கூட பெரிய பேரிடரை பூமியில் தோற்றுவிக்கலாம் என்று விளக்கம் அளித்து உள்ளார் அவர்.