பூமியில் மறைந்து இருக்கும் பொருளை புதையல் என்று அழைப்பார்கள். அப்படி புதையல் ஒருவரால் தேடி கண்டு எடுக்கப்பட்டால் அந்த விவரத்தை உடனுக்குடன் அவர் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க வேண்டும் அல்லது அதிகபட்சம் புதையல் கண்டு எடுத்து இரண்டு மாதத்திற்குள் ஆவது தெரிவிக்க வேண்டும். அவ்வாறு கண்டு எடுக்கப்பட்ட புதையல் ஆனது கருவூலத்தில் ஒப்படைக்கப் படும். மேலும் அந்தப் புதையல் பற்றிய விவரங்கள் எல்லாம் மாவட்ட இதழில் வெளியிடப்படும். அத்துடன் நிற்காது புதையல் பற்றி மாவட்ட ஆட்சியர் தொல் பொருள் ஆராய்ச்சித் துறைக்கு தகவல் தருவார். தொல் பொருள் துறை புதையல் விவரங்களை தஞ்சாவூர் கலைக் கூடத்தில் இருக்கும் செயலருக்கு அனுப்பி வைக்கும். புதையலைக் கண்டு எடுத்தவருக்கு 1/4 பாகம் வழங்கப்படும். அதுவே புதையல் கிடைத்தும் கூட அது பற்றிய தகவல்களை அளிக்கத் தவறினால், அப்படிப் பட்டவர்கள் மீது பிரிவு 20 முதல் 22 இன் படி நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அப்பேற்பட்ட நபர்களின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு காலம் அபராதத்துடன் சிறை தண்டனை கூட வழங்கப்படும்.