விதி 155 - ஆளுநர் பதவி நீக்கம்' என்பது மிகவும் தவறானது. உண்மையில், மேற்கண்ட விதியின் படி, ஆளுநரை நியமிப்பவர் குடியரசுத் தலைவர். ஒரு ஆளுநர், குடியரசுத் தலைவர் விரும்பும் வரை பதவியில் இருக்கலாம் . எனினும் , இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.(சரத்து 156). ஆளுநரே தனது பதவியிலிருந்தும் விலகலாம் . ஆளுநர் தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும். ஆளுநர் தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்பும் புதிய ஆளுநர் பதவி ஏற்கும் வரை நீடிக்கலாம். குடியரசுத் தலைவர் , பதவிக்காலம் முடியும் முன்பே ,ஆளுநரைப் பதவியிலிருந்து நீக்கலாம் அல்லது பதவி நீட்டிப்பு செய்யலாம். சரத்து 157 ஆளுநர் பதவிக்கான தகுதிகளை எடுத்து உரைக்கிறது. இதன் அடிப்படையில் ஆளுநர் என்பவர், இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 35 வயதுநிரம்பியவராக இருத்தல் வேண்டும். ஆளுநர், பாராளுமன்றத்தின் அவைகளிலோ (அ) சட்டமன்றத்தின் அவைகளிலோ உறுப்பினராக இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பின் ஆளுநராக பதவி ஏற்றபோது அந்த உறுப்பினர் பதவி பறிபோய் விடும் (சரத்து 158). மத்திய மற்றும் மாநில அரசில் எந்தப் பதவியிலும் ஊதியம் பெறுபவராக இருக்கக் கூடாது. ஆதாயம் தரும் பதவிகளை ஏதும் வகிக்கக் கூடாது. ஆளுநரின் ஊதியம் மற்றும் வசதிகளை நியமிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது. ஒருவர் , 2 (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தால் குடியரசுத் தலைவர் கூறும் விகிதத்தில் அந்த மாநிலங்கள் ஊதியம் கொடுக்க வேண்டும்.