நிர்வாக சீர்திருத்தக் குழு அரசியல் மற்றும் நிரந்தர செயற்குழுவின் இடையே உள்ள உறவை மேம்படுத்த கீழ்கண்ட பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், 1. அமைச்சர்கள் மூத்த அதிகாரிகள் இடையே பயமற்ற, மற்றும் நேர்மையான நல்ல உறவு வளர்வதற்கான சூழலை ஏற்பட முயற்சிக்க வேண்டும். 2. நிர்வாக சீர்கேடு ஏற்படும் சமயங்களில் அமைச்சர்கள் தலையிடலாமே தவிர, அன்றாட நிர்வாகத்தில் தலையிட கூடாது. செயலர், அமைச்சர்களுக்கு இடையிலான அலுவலக உறவு நம்பிக்கை மற்றும் விசுவாச அடிப்படையில் இருக்க வேண்டும். 3. அமைச்சர்களுக்கு இடையிலான சுமூகமற்ற உறவினை தடுத்து அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். 4. அனைத்து முக்கிய முடிவுகளை சுருக்கமாக எழுதப்பட வேண்டும்.