அமெரிக்காவின் புகழ் பெற்ற நில சீத்திருத்த நிபுணர் திரு. லேட்ஜின்ஸ்கி இந்தியாவில் நில சீர்திருத்தம் பற்றி முழுமையாக ஆராய்ந்த பின்னர், தமிழ் நாட்டில் பின்வரும் மாவட்டம் மிக மோசமான நில குத்தகையை கொண்டு உள்ளது எனக் கூறினார். அந்த மாவட்டம் தான் தஞ்சாவூர். பொதுவாக, நில குத்தகை (Land Lease) என்பது தனியாருக்கு சொந்தமில்லாத தமிழ்நாடு அரசு வசமுள்ள நிலங்கள், தமிழ்நாடு அரசு விலைக்கு வாங்கிய நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை, தற்காலிக பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட கால வரையரைக்குட்பட்டு, குறிப்பிட்ட நோக்கத்திற்காக நீண்டகால அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது தனியாருக்கு வருவாய் துறையால் வழங்கப்படுவதே குத்தகை எனப்படும். குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலங்களுக்காக தமிழ்நாடு அரசின் வருவாய் துறை குறிப்பிட்ட தொகை வசூலிக்கும். இதில் உப்பளம் மற்றும் மீன் வள குத்தகையும் அடங்கும். இக்குத்தகை நிலங்கள் வேளாண்மை அல்லது வேளாண்மை அல்லாத பிற பயன்பாட்டுக்கென இருவகையாக பிரித்து நிலம் குத்தகையில் வழங்கப்படுகிறது.