உச்ச நீதி மன்றத்தில் பொது நல வழக்கில் உள்ள ஒரு மனுவை தகுந்த உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற இந்தக் கூற்று உண்மை அல்ல. பொதுவாகவே, பொது நல வழக்கு (Public interest litigation) இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 32ன் படி, பொதுமக்களின் நலத்தை பாதிக்கும் விடயம் குறித்து, பாதிக்கப்பட்டவரோ அல்லது வேறு ஒரு தனி நபரோ அல்லது தொண்டு நிறுவனமோ மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தை குறிக்கும். சில நேரங்களில் பொதுமக்கள் உயர்நீதிமன்றங்களுக்கு அனுப்பும் ஆவணங்களின் அடிப்படையில், உயர்நீதிமன்றமே தன்னிச்சையாக பொதுநல வழக்கு தொடர்ந்து பொதுநலத்தை காக்க இயலும். எடுத்துகாட்டாக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, பொது நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, கொத்தடிமை வேலை, ஆற்று மணல் திருட்டு, கல் குவாரியில் கல் திருட்டு, சாயப்பட்டறை கழிவு நீரை வடிகால்களில் வெளியேற்றுவது, குழந்தை தொழிலாளர்கள், சுற்றுச் சூழல் பாதிப்பு, தாழ்த்தப்பட்டோர் மீது - சக கிராமத்தார் செய்யும் கொடுமைகள் குறித்து பொதுநல வழக்குகள் தொடரலாம்.