நிதி மசோதா மாநிலங்கள் அவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும் என்பது தவறான கருத்தாகும். நிதி மசோதா, பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் பின்வருமாறு... நிதி மசோதா அல்லது அதில் திருத்தம் போன்றவைகள் குடியரசுத் தலைவரின் பரிந்துரை இல்லாமல் அறிமுகம் செய்தல் கூடாது. நிதி மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த முடியாது. ஒரு வரியினை (கூயஒ)குறைப்பதற்கோ (அ) அழிப்பதற்கோ குடியரசுத் தலைவரின் பரிந்துரை தேவையில்லை. நாடாளுமன்றம் மாநிலங்களவை,மக்களவை என இரு அவைகளைக் கொண்டது. எனவே இந்திய நாடாளுமன்றம் ஈரவை மன்ற முறையைச் சார்ந்தது. இதன் முக்கியமானப் பணி,சீரிய முறையில் ஆட்சி நடப்பதற்கான சட்டமியற்றுதல் ஆகும்.நாட்டின் அமைதி,பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக இச்சட்டங்கள் இயற்றப்படுகிறது. நாடாளுமன்றம் நாட்டின் நிதிநிலைமைக்கு முழு பொறுப்பாகும். மைய வரவு செலவு திட்டங்களை தாக்கல் செய்வதும்,வரி நிர்ணயம் செய்வதும்,பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பதும் அதன் பொறுப்பாகும். அரசியலமைப்பு சட்டவிதிகளைத் திருத்தம் செய்வதும்,குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் அரசியலமைப்பு அதிகாரங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தையும் நாடாளுமன்றம் பெற்றுள்ளது. எந்த ஒரு மாநிலத்தின் மீதும் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யவும் குடியரசுத் தலைவரை நாடாளுமன்றம் அனுமதிக்கிறது. அமைச்சரவையின் செயல்பாட்டினைக் கண்காணிக்கவும் ,மதிப்பீடு செய்யவும் கட்டுப்படுத்தவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது.