ஒரு தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர் ஏழாவது ஆண்டில் 1000 தொலைக்காட்சிப் பெட்டிகளையும் பத்தாவது ஆண்டில் 1450 தொலைக்காட்சிப் பெட்டிகளையும் தயாரித்தார். ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கை சீராகவும் ஒரு மாறிலி எண் அளவும் அதிகரித்தால், முதலாம் ஆண்டிலும், 15 ஆவது ஆண்டிலும் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கையைக் காண்க.