கிராம நிர்வாக அலுவலருக்கு நில அளவைப் பயிற்சி என்பது குறைந்தது ஒரு மாதத்திற்கு குறையாமல் அளிக்கப்பட வேண்டும். மேலும் இந்தப் பயிற்சி நில அளவைத் துறையால் அளிக்கப்படும். அந்தப் பயிற்சி முடிவில் அந்த கிராம நிர்வாக அலுவலர் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் மீண்டும் பயிற்ச்சியில் ஈடுபட்டு தேர்வு எழுத வேண்டும். மூன்றாவது முறையும் பயிற்ச்சியில் தவறினால் அந்தக் கிராம நிர்வாக அலுவலர் தனது பதவியில் இருந்தே வெளியேற்றப்படுவார். அத்துடன் பயிற்சி காலத்தில் அவர் பெற்ற சம்பளத்தையும் இதர படிகளையும் கூட அரசுக்கு (தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் 1864 இன் படி) திருப்பிச் செலுத்த வேண்டி இருக்கும். அதாவது அவற்றை அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று விரிவாக அது பற்றி மேற்கண்ட சட்டம் எடுத்துரைக்கிறது. மேலும் அவ்வாறு திருப்பிச் செலுத்தப்படும் அத்தொகை நிலவரி பாக்கியாக கருதப்பட்டு வசூலிக்கப்படும்.