தமிழைத் தவிர பிற மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் இரண்டாம் நிலை தமிழ் மொழித் தேர்வில் அவசியம் வெற்றி பெற வேண்டும். இந்த இரண்டாம் நிலை தமிழ் மொழித் தேர்வையும் கூட அரசுப் பணியாளர் தேர்வுக் குழு தான் நடத்தும். ஒரு வேளை இந்த இரண்டாம் நிலை தமிழ் மொழித் தேர்வில் வெற்றி பெறவில்லை என்றால் அந்தக் குறிப்பிட்ட கிராம நிர்வாக அலுவலர் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து நீக்கப்படுவார்.