கிராம நிர்வாக அலுவலர் பதவியில் சேரும் ஒருவர் தான் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தகுதிக் காண் பருவத்தில் இருத்தல் வேண்டும். அத்துடன் குறிப்பாக அக்காலத்தில் மிகுந்த கவனமுடன் பொறுப்பாக நடந்து கொள்ளல் வேண்டும். மேலும் அந்த தகுதிக் காண் பருவத்தில் கீழ்க்கண்ட மூன்று தேர்வுகளிலும் கண்டிப்பாக ஒரு கிராம நிர்வாக அலுவலர் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். அவைகள் பின்வருமாறு:-~~~~(அ) கிராம நிர்வாக அதிகாரிகளின் அதிகாரங்களும் கடமைகளும் ~~~~(ஆ) கிராம சுகாதாரம் ~~~~(இ) கிராமக் கணக்குகள் நடைமுறை நூல் ---போன்றவையே அவை