தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறையின் கீழான ஆட்சி அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியில் இருப்பவரின் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் இயங்குகின்றன. இந்த மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் கிராமத்தில் இருந்து மாவட்டம் வரை கீழ்காணும் அமைப்புகள் இருந்து வருகின்றன.~~~~1. கிராம நிருவாக அலுவலர் அலுவலகம்~~~~2. வருவாய் ஆய்வாளர் அலுவலகம்~~~~3. வட்டாட்சியர் அலுவலகம்~~~~4. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்~~~~5. மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் ( டி. ஆர். ஓ)~~~~6. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்.~~~~-இந்த வருவாய்த்துறையின் வழியாகத் தான் தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மக்களின் நேரடித் தொடர்பிற்கு இன்றி அமையாத துறையாக இருப்பது இந்த வருவாய் நிர்வாகத் துறை ஆகும்.