மீன் வளத்தை குத்தகைக்கு விடும் அதிகாரம் அந்தந்த ஊராட்சி நகராட்சி ஒன்றியங்களுக்கு மட்டுமே உண்டு. மேலும் பொதுப் பணித்துறை அதிகார வரம்பிற்கு உட்பட்ட நீர் நிலைகளில் மீன் வளக் குத்தகை என்பது மீன் வளக் கூட்டுறவு சங்கங்கள் மூலமே விடப்படுகிறது. அச்சமயத்தில் ஏலத்திற்கான முதல் கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியவர் கிராம நிர்வாக அலுவலர் தான். அத்துடன் அந்த ஏலம் விவசாய நீர் பாசனத்தை பாதிக்காதவாறு இருத்தல் வேண்டும். அதாவது மீன் பிடிப்பதற்காக இயந்திரங்கள் மூலம் தண்ணீர் இறைப்பதை அனுமதித்தல் கூடாது. இந்நிலையில் ஒரு வேளை, அந்த ஏலத்தை பொதுமக்கள் யாரும் எடுக்காத நிலையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி அரசே எடுத்துக் கொள்ளும். இந்த விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் ‘Bough in land’ என்ற பதிவேட்டில் பதிவு செய்வார்.