நீண்ட காலக் குத்தகைகளாகப் பெறப்பட்டு நிபந்தனைகள் மீறப்பட்டு உள்ள நிலங்கள் என்று பார்த்தால் அவை நகராட்சியும் அதனை சுற்றி உள்ள நிலங்களுமே ஆகும். அந்த வகையில் நகராட்சி நிலங்களை குத்தகை நிபந்தனைகளை மீறி அனுபவிப்பவர்கள் மீது நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குத்தகை செலுத்தாமல் அரசை ஏமாற்றுபவர்களை அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.