கிராமத்தின் மாதவாரி சாகுபடி கணக்கு, கிராமக் கணக்கு எண் 1 இல் காணப்படும். அதே போல, கிராமக் கணக்கு எண் 2 இல் அடங்களில் பதியப்பட்ட சாகுபடி விபரங்கள் பற்றிய கணக்கு காணப்படும். அவை புல வாரியாகவும், பயிர் வாரியாகவும் எழுதப்பட்டு இருக்கும். ~~~~இதில் மார்ச் மாத கடைசிக்கு முன்பு நடப்பட்டு சூன் மாத இறுதியில் பூமியில் உள்ள பரப்பினை மொத்த சாகுபிடியில் கழிக்க வேண்டும். அத்துடன் கழித்த இருப்பை மறு வருடம் சூலை மாதக் கணக்குடன் சேர்க்க வேண்டும். இந்தக் கணக்கு ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் பராமரிக்கப் பட வேண்டும்.