ஒரு கிராமத்தின் அமைப்பை அதன் கிராம வரைபடம் மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்த கிராம வரை படத்தில் தான் அந்த கிராமத்தில் இருக்கும் ஆறுகள், இரயில்வே பாதைகள், மின் கம்பித் தடங்கள், புராதனச் சின்னங்கள் போன்றவை பற்றிய விவரங்கள் இருக்கும். ஒரு நில அளவு புலம் ஒரு கிராமத்தில் எங்கு உள்ளது என்பதைக் கூட கிராம வரைபடம் மூலமாக அறியலாம். அந்த வகையில் அப்படம் மிகத் துல்லியமாக இருத்தல் அவசியம்.