மத ஸ்தாபனங்களுக்கு ஊழியம் செய்வதற்கு வழங்கப்பட்ட இனாம்களின் பெயர் தேவாதாயம் எனப்படும்.~~~~ சத்திரம், தண்ணீர் பந்தல், கல்வி ஸ்தாபனங்கள் போன்றவற்றிற்காக வழங்கப்பட்ட இனாம்களுக்கு தர்மாதாயம் என்று பெயர்.~~~~வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களைக் காக்க வழங்கப்பட்ட இனாம்களை தசபந்தம் என்பர்.~~~~வேதியருக்கு வழங்கப்பட்ட இனாம்களை பிரம்மதாயம் என்பர். ~~~~முன்னாள் பாளையம், ஜமீன், உறவினர், ஊழியருக்கு, வாரிசு தாரருக்கும் வழங்கப்பட்ட இனாம்கள் அனைத்தும் 'சொந்தம்' என்று அழைக்கப்பட்டது. ~~~~இது தவிர அக்கால நிர்வாகத்தில் பண்டையக்கால காவல் பணியாளர்களுக்கு காவல் ஊழியம் வழங்கப்பட்டது.~~~~கிராம வரிவசூல் மற்றும் கிராம காவல் வேலைக்காக வழங்கப்பட்ட இனாம்களை 'கிராம ஊழியம்' என்பர். ~~~~அதே போல கைவினைஞர் இனாம் தச்சர், கொல்லர், நாவிதர்கள் ஆகியோருக்கு அவர்களின் கிராமப் பணிக்காக வழங்கப்பட்டது.