கிராமத்தில் பெய்த மழையின் அளவு அந்நாளில் 8:30 am மணி வரையில் கணக்கிடப்படுகிறது. அப்போது மழையின் அளவு மில்லி மீட்டர் கணக்கில் பதிவு செய்யப்படுகிறது. மழை மானி இல்லாத கிராமத்தில் ‘செவி’ என்ற கணக்கில் அது கணக்கிடப்படுகிறது. இதனைத் தான் மழைக் கணக்கு என்பர். இந்தக் கணக்கு அக்கம் பக்க கிராமங்களின் கணக்குகளுடன் சரி பார்க்கப்படும். இந்தக் கணக்குடன் நீர பாசன ஆதாரங்களின் தண்ணீர் இருப்பையும் உடன் பதிவிட வேண்டும்.