கிராமக் கணக்கு எண் 21 கிராமத்தில் இருக்கும் கால் நடைகளை பற்றியது. இதில் கால் நடை வாரியான விபரங்கள் விவசாயக் கருவிகள் இருப்பு ஆகியவற்றை பதிய வேண்டும். இந்தக் கணக்கை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்க வேண்டும். அத்துடன் ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை கால் நடை புள்ளி விபரக் கணக்குடன் இதனை ஒப்பிட்டுச் சரி பார்க்க வேண்டும்.