பொதுவாக நில புலன் மாறுதலைக் காட்டும் பதிவேடு 'அ' பதிவேடு ஆகும். இந்த 'அ' பதிவேடுகள் கையால் எழுதி தயாரிக்கப்பட்டு பின்னர் அதன் பிரதிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். பிறகு மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அதே கிராம நிர்வாக அலுவலருக்கு வழங்கப்படும். அந்த ‘அ’ பதிவேட்டில் நடைமுறையில் ஏற்படும் மாறுதல்களைப் பதிவு செய்ய இடைச் செருகலாக வெற்றுக் காகிதங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும். மேலும் அந்த ‘அ’ பதிவேட்டின் முதல் பகுதியாக இருப்பது வருவாய் கிராமத்தின் வரலாற்றுக் குறிப்பாகும்.