நகர்ப்புற நிலவரிச் சட்டம் சென்னை பகுதிக்கு மட்டுமே முதன் முதலில் 1.7.1963 இல் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களிடம் அதிகப் பரப்புள்ள நகர்புற நிலங்கள் இருப்பதை தவிர்க்கத் தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு 1.7.1971 முதல் சந்தை மதிப்பு அடிப்படையில் நிலவரி நிர்ணயம் செய்யப்பட்டது. 1.7.1981 இல் நெல்லை மாநகராட்சிக்கு இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1.7.1991 இல் பிற நகராட்சிகளுக்கும் அமுல் செய்யப்பட்டது. எனினும் சென்னை புற நகர் பகுதிகளில் இந்தச் சட்டம் 01.07.1995 இல் நீக்கப்பட்டது.