சந்தை மதிப்பின் படி சரியான குத்தகைத் தொகையை நிர்ணயம் செய்பவர் கிராம நிர்வாக அலுவலர் தான். மேலும் குத்தகையை வசூல் செய்யும் பொறுப்பும் கூட கிராம நிர்வாக அலுவலர் அவர்களைத் தான் சேரும். ஒருவேளை குத்தகை நிபந்தனை மீறப்பட்டால் கிராம நிர்வாக அலுவலர் அதனை வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.