பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகியவை பொதுவான உயர் நீதி மன்றத்தை கொண்டு உள்ளன. இவை தவிர, தேசியத் தலைநகர் டெல்லி தனக்கென ஒரு உயர்நீதி மன்றத்தை கொண்டு உள்ளது. இப்பகுதியில் மேற்கொண்டு நீதிமன்றங்கள் பற்றிப் பார்ப்போம்... இந்தியாவின் நீதியாண்மை அமைப்பு அதன் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டதாகும். இதன் படி அமைக்கப்பட்ட 25இந்திய உயர் நீதிமன்றங்கள்' தத்தம் வரம்பிற்குட்பட்ட மாநிலங்களில் நீதிமுறைப் பணிகளை செலுத்துகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகள் இவற்றின் நீதியாண்மையின்கீழ் வருகின்றன. உயர்நீதிமன்றங்களுக்கு கீழ் உரிமை இயல் (சமூக நலன்) நீதிமன்றங்கள் (சிவில்), குடும்ப நல நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் (கிரிமினல்) மற்றும் இதர மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. உயர்நீதிமன்றங்களின் மூல நீதிமுறைமையின் முதன்மையானது மாநிலத்தின் உரிமை இயல்(சமூக நலன்) நீதிமன்றங்களை உள்ளடக்கியது ஆகும். மற்றும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள், மரண தண்டணை விதிக்கக்கூடிய குற்றங்களை விசாரிப்பதும் அகும். கீழ் நீதிமன்றங்களால் வழங்கப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் (writ-ரிட்) அழைப்பாணை மனுக்கள் போன்ற வழக்குகளை இந்திய அரசியல் சட்ட விதி 224-ன் படி விசாரணை செய்யும். உயர்நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 4, அத்தியாயம் 5, விதி 214 ன் படி நிறுவப்பட்டுள்ளன.