ஒரு மசோதாவை பண மசோதா என்று முடிவு செய்வது சபாநாயகர் தான். பண மசோதா என்பது, எந்த வரியின் விதிப்பும், ஒழிப்பும், குறைப்பும், மாற்றல் ஒழுங்குபடுத்தல். பணம் வாங்குவதில் ஒழுங்குமுறை அல்லது இந்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட பொறுப்புறுதி ஏதேனும்... திரட்டு நிதி அல்லது நிகழ்வு சார் நிதி பணத்தை கொடுத்தல் அல்லது எடுத்தல், இந்தியத் திரட்டு நிதியிலிருந்து பணம் ஒதுக்குதல். இந்தியத் திரட்டு நிதியிலிருந்து ஈடுகட்டப்படும் என செலவினத்தை அறிவித்தல். இந்தியத் திரட்டு நிதி கணக்கில் அல்லது இந்தியாவின் பொதுக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொள்ளல் அல்லது அந்தப் பணத்தின் பாதுகாப்பு அல்லது வெளியீடு அல்லது மத்திய அல்லது மாநில அரசினுடைய கணக்குகளை தணிக்கை செய்தல் போன்ற அடிப்படையில் அமைகிறது. மேலும், பின்வருவனவைகள் பண மசோதா ஆகாது. இதன் படி, அபராதங்கள் அல்லது பணத் தொடர்பான தண்டனைத் தொகைகள் விதிப்பு. உரிமத்திற்கான கட்டணம் செலுத்துதல் அல்லது சேவைக்கான கட்டணம் செலுத்துதல். உள்ளூர் அதிகார அமைப்பால் அல்லது உள்ளூர் நோக்கங்களுக்காக உண்டாக்கப்ட்ட அமைப்பினால் விதிக்கப்பட்ட ஒழிக்கப்பட்ட ,குறைக்கப்பட்ட , மாற்றப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட எவ்வரியும். ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என வினா விழுந்தால் அதனை முடிவு செய்வது மக்களவை சபாநாயகர் ஆவார் அவரது முடிவே இறுதியானது. பாராளுமன்ற இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசு தலைவரின் இசைவினை பெற்று சட்டமாகிறது. இசைவிற்கு வரும் மசோதாக்களை குடியரசுத் தலைவர் தனது இசைவினை அளிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது பண மசோதா தவிர சாதாரண மசோதாக்களில் மறு பரிசீலனை செய்ய ஒருமுறை திருப்பி அனுப்பலாம்.