a. மத்திய பட்டியல் "பாதுகாப்பு" சம்பந்தமானது. b. மாநில பட்டியல் "பொது ஒழுக்கம் மற்றும் காவல்" சம்பந்தமானது. c. பொதுப் பட்டியல் "குற்றவியல் சட்டம் மற்றும் வழிமுறை" சம்பந்தமானது. இதில் கவனிக்கப்பட வேண்டியது, இந்தியாவானாது ஒன்றிய அரசு அளவில் கூட்டாட்சியையும், அவற்றின் மாநிலங்கள் அளவில் ஒற்றையாட்சியையும் கொண்டுள்ளது. இதனை செவ்வனே செய்ய இந்திய அரசியலமைப்பு அதிகாரங்களை கீழ்கண்ட பட்டியல்கள் வழியாக வழங்குகின்றன.இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை பனிரெண்டு ஆகும். அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது, இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே ஆகும்.பின்னர், 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன.