1966 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 5 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட இந்திய நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் மொரார்ஜி ஆர். தேசாய் ஆவார். மொரார்சி ரன்சோதிசி தேசாய் இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.