சர் அல்லாடி கிருஷ்ண சுவாமி அய்யர் கூற்றுப்படி இந்திய ஐக்கியத்தின் உச்ச நீதிமன்றம் உலகின் எந்த நாட்டில் உள்ள உச்ச நீதி மன்றத்தை விடவும் அதிக அதிகாரம் உடையது ஆகும். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வழக்கறிஞரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர். சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் 1883ல் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமியின் தந்தை ஏகாம்பர சாஸ்திரி ஒரு கோயில் பூசாரி ஆவார். 1899 ல் பள்ளிப் படிப்பை முடித்த கிருஷ்ணசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞர் படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தவர். பின்னர் வெங்கட லட்சுமியை மணந்தார்.1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை அரசு வழக்கறிஞராகவும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். பின்னர் வந்த நாட்களில் அல்லாடி கிருஷ்ணசாமியின் மகன் அல்லாடி குப்புசாமி, தன் தந்தையின் நினைவாக, சென்னையில் 1983ல் அல்லாடி நினைவு அறக்கட்டளையை நிறுவினார்.