மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நாட்டில் 98 நகரங்களை தேர்வு செய்து ஐந்து ஆண்டுகளில் அவற்றை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றி அமைக்க இருக்கிறது. அந்த வகையில் கீழ்க்கண்டவற்றுள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்படாதது "சிதம்பரம்" ஆகும். சிதம்பரம் (Chidambaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராசர் கோயில் உலகப்புகழ் பெற்றது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 மன்ற உறுப்பினர்களையும், 15,166 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 62,153 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5869 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,232 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 89.73%%, இசுலாமியர்கள் 8.22%, கிறித்தவர்கள் 1.18%, தமிழ்ச் சமணர்கள் 0.43%, மற்றும் பிறர் 0.44% ஆகவுள்ளனர்.