இந்திய அரசியல் அமைப்பின் 25 ஆவது விதி உத்திரவாதம் அளிப்பது "சமய உரிமைக்கே". இந்த சரத்தின் அடிப்படையில், நமது அரசியலமைப்பு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமய சுதந்திரத்தினை அளிக்கிறது. எல்லா சமயங்களும் ஒரே மாதிரியாகக் கருத வேண்டும். இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் மனத்திற்கு உகந்த சமயங்களை சார்ந்து வாழவும், நெறிமுறைகளைகடைப்பிடிக்கவும், பரப்பவும் சுதந்திரம் அளிக்கிறது. இச்சுதந்திரத்திற்கு பொது அமைதி, ஒழுங்கு, சுகாதாரம், அறநெறி போன்ற காரணங்களுக்காக கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஓவ்வொரு சமயமும் அற நோக்கங்களுக்காகவும், மேலாண்மை செய்யவும், சொத்துகளை நிர்வகிக்கவும் உரிமை உண்டு. சமயத்திற்கு வரி விதிப்பதை தடை செய்கிறது சரத்து 27.