இந்திய கூட்டாட்சியின் விநோதத் தன்மை வலுவான மையம் என்பதே! இந்தியாவில் மத்தியில் ஒன்றிய அரசும் மாநிலத்தில் மாநில அரசுகளுமாக இரண்டு அரசு இருக்கும் கூட்டாட்சி (federal system) நடைமுறையில் உள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசும் அதிகாரத்தையும், அவ்வதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான வளத்தையும் பகிர்ந்து கொள்ளும். ஒரு சில அதிகாரங்களை இரண்டும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுத்துகிறது. கூட்டாட்சி முறையின் அம்சங்கள்: 1. இரட்டை அரசாங்க முறை 2. அதிகாரப் பகிர்வு 3. அரசியலமைப்பின் ஒப்புயர்வற்ற தன்மை 4. எழுத்து வடிவத்தில் அரசியலமைப்பு 5. நெகிழ்வற்ற அரசியலமைப்பு 6. நீதி மன்றங்களின் அதிகாரம் ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு ஒன்று கூறுவது: “இந்தியா அல்லது பாரதம் பல மாநிலங்களின் ஒன்றமைப்பாகும்”.