இந்திய அரசியலமைப்புச் சட்டதில், அரசு தகுந்த வகைமுறைகளை கல்வி உரிமையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டும் என்று பிரிவுக் கூறு 41 இல் கூறப்பட்டுள்ளது. அரசு எல்லா குழந்தைகளுக்கும் ஆரம்ப கட்ட குழந்தை பருவத்தை காக்கவும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கெல்லாம் கட்டாய கல்வி கொடுக்க வேண்டும் என்று பிரிவுக் கூறு 45 இல் கூறப்பட்டுள்ளது. உன்னிக்கிருஷ்ணன் எதிர் ஆந்திரா மாநிலம் (வழக்கு எண்: (1993) 1 SCC645) என்ற வழக்கில் அனைத்து குழந்தைக்கான கல்வி உரிமை வயது 14 வயதாக இந்திய உச்ச நீதிமன்றம் உயர்த்தியது. அரசு சிறப்பான கவனத்துடன் கல்வி மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக பலவீனமான மக்கட் பிரிவை சேர்ந்த ஆதி திராவிட வகுப்பினரையும், பழங்குடியினரையும் காப்பதற்கும் அவர்களை சமூக அநீதியில் இருந்தும், அனைத்து விதமான சுரண்டல்களில் இருந்து காக்க வேண்டும் என்று பிரிவுக் கூறு 46 ஆம் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு 86 வது ( சட்டத் திருத்தம்) சட்டம், 2002 மூலம் பிரிவுக் கூறு 21 A அரசியல் அமைப்பில் நுழைக்கப்பட்டது. இதன் மூலம் ஆறு வயது முதல் 14 வயதுக்குட்டபட்ட குழந்தைகட்கு கல்வி உரிமை, அடிப்படை உரிமையாக பிரிவுக் கூறு 21 A வில் நிர்ணயக்கப்படுள்ளது. எனினும், கல்வி உரிமை சட்டம் (2009) என்பது உயர்கல்விக்கு பொருத்தமற்றதாகவே இருக்கிறது.